
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், தனது அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்த அமெரிக்காவிடம் ரூ.95,000 கோடி நிதி உதவி கோரியுள்ளது.
இந்த நிதியுதவிக்கான கோரிக்கை அமெரிக்க கருவூலத் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்த பதில் செப்டம்பர் இறுதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் ஏற்கனவே 2024-ம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் 7 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.