
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.10.50 உயர்ந்து, இன்று முதல் ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை மாற்றத்தை அறிவித்துள்ளன.
வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி, தொடர்ந்து ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.