25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் 'மூன்வாக்' திரைப்படம் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதோடு 5 பாடல்களைப் பாடியுள்ளார், நடிகர் யோகி பாபு 16 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் இப்படத்தை பிகைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் மனோஜ் என்.எஸ் தயாரித்து இயக்கியுள்ளார்.