
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் எச்சரிக்கும் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களது அதிர்ஷ்டத்தை மீண்டும் சோதித்துப் பார்க்கட்டும் என சவால்விட்டுள்ளார்.
உள்நாட்டு நெருக்கடிகளில் இருந்து தப்பிப்பதற்காகவே நெதன்யாகு அமெரிக்காவை மற்றொரு போருக்குள் தள்ளி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஈரான் முன்வைத்த 7 நாட்கள் ஒப்பந்த முன்மொழிவு இன்னும் பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.