
நீட் தேர்வுக்கு வித்திட்டதே காங்கிரஸ்-திமுக கூட்டணிதான் என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.
2010-ல் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நீட் தேர்வுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டதாகவும், 2013-ல் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தபோதும் சீராய்வு மனு தாக்கல் செய்து தேர்வை உயிர்ப்புடன் வைத்தது அப்போதைய UPA அரசுதான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் வாக்குறுதிகளில் நீட் விலக்கு குறித்துப் பேசி திமுக தமிழ்நாட்டு மாணவர்களை ஏமாற்றி வருவதாகவும் தம்பிதுரை ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.