ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் அடுத்த முறை இலவசம் என்ற சிறப்புச் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ.299 மற்றும் ரூ.349 ஆகிய குறிப்பிட்ட திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் இந்தச் சலுகை வாயிலாக அடுத்த 28 நாட்களுக்கான ரீசார்ஜ் இலவசமாக வழங்கப்படும்.
இந்தச் சலுகை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்காது என்றும், நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வ மெசேஜ் அல்லது வாய்ஸ் கால் வந்தவர்களுக்கு மட்டுமே மைஜியோ ஆப் மூலம் இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.