
ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆண்கள் கிரேக்க ரோமன் மல்யுத்தம் 97 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் நிதேஷ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
இறுதிப் போட்டியில் ஜப்பானின் யூரி நகாசடோவிடம் 6-0 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால் நிதேஷ் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்த வெற்றியுடன் இந்தியா இதுவரை 10 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 64 பதக்கங்களைப் பெற்றுள்ளது.