
ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜி.டி.என்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சத்யராஜ், பிரியாமணி, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர், கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
மாதவன் மற்றும் சரிதா மாதவன் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஜி.டி.நாயுடுவின் சாதனைகளை உலகிற்கு கொண்டு செல்லும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.