
JSW MG மோட்டார் இந்தியா நிறுவனம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை சிறப்புத் தள்ளுபடி அறிவித்துள்ளது.
எம்ஜி ஆஸ்டர் காருக்கு ரூ.2.20 லட்சமும், ZS EV காருக்கு ரூ.2.15 லட்சம் மற்றும் 2,000 யூனிட் இலவச சார்ஜிங் சலுகையும் வழங்கப்படுகிறது.
ஹெக்டர் காருக்கு ரூ.60,000 தள்ளுபடியும், விண்ட்சர் மற்றும் காமெட் இவி கார்களுக்குத் தலா 1 கிராம் தங்க நாணயமும் பரிசாக வழங்கப்படுகிறது.