உணவைச் செரிக்க வயிறு பகுதிக்கு அதிக இரத்த ஓட்டம் செல்வதால் மூளையின் செயல்பாடு சற்று குறைந்து லேசான மந்தநிலை ஏற்படுவதை மருத்துவ உலகில் 'Postprandial Somnolence' என்கின்றனர்.
அதிக அளவு மாவுச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது சுரக்கும் இன்சுலின் ஹார்மோன், தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோன்களை அதிக அளவில் உற்பத்தி செய்யத் தூண்டுகிறது.
தினசரி ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் கட்டுப்படுத்த முடியாத அதீத சோர்வு ஏற்பட்டால் அது சர்க்கரை நோய் அல்லது இரத்த அழுத்தக் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம் என்பதால் மருத்துவரை அணுகுவது நல்லது.