சஜீவ் பாழூர் இயக்கத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள 'என்ன விலை' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
நீதிமன்றப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜயலட்சுமி வீரமணி, கமலேஷ் ஜெகன், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சாம் சி.எஸ் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து செப்டம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.