
ஹர்திக் பாண்ட்யா அணியிலிருந்து வெளியேற முடிவெடுத்துள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரோகித் சர்மா, பும்ரா மற்றும் திலக் வர்மா ஆகிய மூவரும் கேப்டன் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹர்திக் பாண்ட்யாவை மற்ற அணிகள் வாங்க முயற்சிக்கும் நிலையில், டீல் நிறைவடையாத பட்சத்தில் அவர் அணியில் நீடித்தாலும் கேப்டன் பதவியில் இருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.