
குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17,427 கனஅடியாக அதிகரித்துள்ளது.
124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து, நேற்று காலை நிலவரப்படி 110.30 அடியாக உள்ளது.
கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,676 கனஅடியாகக் குறைந்துள்ள நிலையில், இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 10,614 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.