
தமிழகப் பகுதிகள் வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதால், நாளை (செப்.12) முதல் செப். 17-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப். 12 மற்றும் 13-ல் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
உள் தமிழகத்தில் செப். 12 முதல் செப். 15 வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.