Sports
சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: அரையிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி

சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: அரையிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி

dinamalar1h
THE BRIEF
1

சீனாவில் நடைபெறும் 'சூப்பர் 750' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்-சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியுள்ளது.

2

காலிறுதிப் போட்டியில் டென்மார்க்கின் கிம் அஸ்ட்ருப்-ஆன்டர்ஸ் ராஸ்முசென் ஜோடியை 21-13, 16-21, 21-18 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி ஒரு மணி நேரம் 10 நிமிடங்களில் வீழ்த்தியது.

3

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் செயுக் இயு லீயிடம் 16-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.