
கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் பாரா தடகளப் போட்டியில், ஆடவர் குண்டு எறிதல் எஃப்57 பிரிவில் இந்தியாவின் சோமன் ராணா தங்கம் வென்று சாதனை படைத்தார்.
43 வயதான சோமன் ராணா, 2005-ல் காஷ்மீரில் பணியின் போது கண்ணிவெடியில் சிக்கி தனது வலது காலினை இழந்த முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.
2017-ல் பாரா தடகளப் பயிற்சியைத் தொடங்கிய அவர், தனது அடுத்த இலக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் பாராலிம்பிக் போட்டி என அறிவித்துள்ளார்.