
தம்பதியர் தனித்தனியாக உணவு வாங்கி, சமைத்து, உண்ணும் ‘ஃபுட் டைவர்ஸ்’ (Food divorce) என்ற புதிய பழக்கம் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரபலமாகி வருகிறது.
GLP-1 வகை உடல் எடைக் குறைப்பு மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் பசியின்மை மற்றும் உணவு விருப்ப மாற்றங்களே இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
துரித உணவுகள் மற்றும் ரெடி-டு-ஈட் உணவுகளின் அதிகரிப்பு, தம்பதிகள் ஒன்றாக அமர்ந்து உண்ணும் பாரம்பரியப் பழக்கத்தைக் குறைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.