
ஹார்முஸ் நீரிணை வழியாக பயணிக்க இந்தியக் கப்பல்களுக்குச் சிறப்பு அனுமதி வழங்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.
இந்தியாவிடம் இருந்து மருந்துப் பொருட்களைப் பெறுவதற்காக இந்த விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் மற்றும் காப்பீட்டுக் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு ஆபத்துகள் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.