
பழநி தண்டாயுதபாணி கோயில் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை மோசடியாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த முன்ஜாமின் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் அவரைப் பண்ணைக்காடு பகுதியில் வைத்து கைது செய்தனர்.
இந்த நில மோசடி வழக்கில் ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜஸ்டின் மணிகண்டன் ஐந்தாவது நபராகக் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.