
பிரான்ஸ் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் நட்சத்திர வீரர் ஜினெடன் ஜிடேன் 4 ஆண்டு ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 14 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்த டிடியர் டெசாம்ஸ் உலகக் கோப்பைக்குப் பிறகு விலகிய நிலையில், செப்டம்பர் 25-ம் தேதி துருக்கிக்கு எதிரான நேஷன்ஸ் லீக் போட்டியில் ஜிடேன் தனது பணியைத் தொடங்குகிறார்.
1998 உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த 54 வயதான ஜிடேன், ரியல் மாட்ரிட் கிளப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு இந்த வாய்ப்புக்காக 5 ஆண்டுகளாகக் காத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.