
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது.
முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ.600 கோடி வசூலித்த நிலையில், இரண்டாம் பாகம் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயிலர் 2 படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.