
இத்தாலியில் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் அணிவதற்கு தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கையாகவும், சிறுமிகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் இந்தத் தடை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலிய மொழியில் போதிய திறன் இல்லாத மாணவர்களின் எண்ணிக்கையை ஒரு வகுப்பில் 30 சதவீதமாகக் கட்டுப்படுத்தும் சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.