
இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட் மூலம் 'ஜூசாட்-1 ஏ' (இ.ஓ.எஸ். 5) செயற்கைக்கோள் நாளை அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து இந்த ஏவுதல் நடைபெறுகிறது.
புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவைத் தொடர்ந்து கண்காணிக்கும் நாட்டின் முதல் இமேஜிங் செயற்கைக்கோளாக இது செயல்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.