
மலையாளத் திரையுலகில் பிரபல நடிகையாக வலம்வரும் மமிதா பைஜுவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி ஒன்று பரவியது.
அவரது சகோதரர் மிதுன் பைஜுதான் அவரது காதல் மற்றும் திருமணம் உள்ளிட்ட அனைத்து முக்கிய முடிவுகளையும் தீர்மானிக்கிறார் என அத்தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு மினியன் ஸ்டிக்கருடன் 'Whaaat?!' என்று பதிலளித்துள்ள மமிதா பைஜு, அந்த வதந்திக்கு நகைச்சுவையான முறையில் மறைமுகமாக எதிர்வினையாற்றியுள்ளார்.