
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர் 2' திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை எட்டாததற்கு தயாரிப்பு நிறுவனம் செய்த ஓடிடி ஒப்பந்தமே முக்கிய காரணமாக உள்ளதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
வட மாநில திரையரங்குகள் எட்டு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி வெளியிட வேண்டும் எனக் கோரிய நிலையில், நான்கு வார இடைவெளிக்குள் வெளியிட தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் செய்ததால் வட மாநிலங்களில் திரையரங்குகள் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், அனைத்து தடைகளையும் தாண்டி இப்படம் ஆயிரம் கோடி மைல்கல்லை எட்டும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.