
காசா முனையில் உள்ள பெய்த் லஹியா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
பலியானவர்களில் 12 மற்றும் 8 வயதுடைய இரண்டு குழந்தைகளும் அடங்குவர் என்றும், தாக்குதலில் வீடு ஒன்று முழுமையாகச் சேதமடைந்ததாகவும் பாலஸ்தீனிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களைக் கீழே போட்டு சரணடையும் வரை போரில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.