Economy
கச்சா எண்ணெய் விடுவிப்பு: ஜி7 நாடுகள் ஒப்புதல்

கச்சா எண்ணெய் விடுவிப்பு: ஜி7 நாடுகள் ஒப்புதல்

Daily Thanthi2h
THE BRIEF
1

சர்வதேச அளவில் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த அவசர கால இருப்புப் பெட்டகங்களில் இருந்து 10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை உலக சந்தைக்கு வெளியிட ஜி7 நாடுகள் கூட்டாக ஒப்புதல் அளித்துள்ளன.

2

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையில் நடைபெற்ற அவசரக் காணொலி மாநாட்டில் எடுக்கப்பட்ட இந்த முடிவு உடனடியாக தொடங்கி அடுத்த 4 மாதங்களுக்குத் தொடரும்.

3

இந்த நடவடிக்கையால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு குறைந்து, இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கட்டுக்குள் வர வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.