
அமெரிக்கா உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கு இஸ்ரேல் மிகப்பெரிய தடையாக இருப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஸி குற்றம் சாட்டியுள்ளார்.
ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் ஈரானுக்குச் சாதகமாக இருந்ததால், அதைத் தோல்வியடையச் செய்ய இஸ்ரேல் தொடர்ந்து முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ராஜதந்திர ரீதியாக ஈரான் வெற்றி பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது மக்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் கிடைத்த வெற்றி என்று கூறினார்.