
2027-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரில் தான் விளையாடுவேனா என்பதே தனக்குத் தெரியாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
கடந்த சில காலமாகவே ஒவ்வொரு தொடராகத்தான் தனது எதிர்காலத்தைப் பற்றி முடிவு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சவாலான ஆடுகளங்களில் அணிக்காக ரன்கள் குவிப்பதிலும், தலைமைத்துவப் பொறுப்புகளில் உதவுவதிலும் முழுமையாக பங்களித்து வருவதாக அவர் கூறினார்.