
இந்தியாவில் யூபிஐ எனப்படும் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை சேவைகளில் குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படலாம் என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
சேவை பயனாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டாலும், அதை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் வங்கிகளுக்கு ஆகும் செலவை யாராவது ஏற்க வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து பரிவர்த்தனைகளையும் இலவசமாக வைத்திருப்பது புதிய தொழில்நுட்பங்களில் வங்கிகள் முதலீடு செய்வதைப் பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.