உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய திடீர் ஏவுகணைத் தாக்குதலில், இந்தியர் ஒருவர் உட்பட மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமானதோடு, ஆயுதக் கிடங்கு ஒன்றும் வெடித்துச் சிதறியதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு உக்ரைன் முழுவதும் பதற்றம் நிலவுவதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.