
கரூர் அருகே பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கத் தாலிச் செயினைப் பறிக்க முயன்ற புகளூர் பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி நந்தகுமாரை வேலாயுதம்பாளையம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், மோட்டார் சைக்கிளில் வந்து செயின் பறிக்க முயன்ற நந்தகுமாரை போலீஸார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
சம்பவம் குறித்து பிரியா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வேறு யாருக்கும் இதில் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.