டெண்டர் முறைகேட்டு குற்றச்சாட்டில் தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக இருந்த பாலச்சந்தர் விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு பதிலாக ஆவடி மாநகராட்சி கமிஷனர் சரண்யா மறு உத்தரவு வரும் வரை தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஆவடி மாநகராட்சி கமிஷனர் சரண்யா தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக கூடுதல் பொறுப்பாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.