
தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜூலை 9-ஆம் தேதி அறிவிப்பாணைப்படி, வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்தை அடுத்தடுத்து பாட வேண்டும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு தள்ளிவைத்துள்ளது.