
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகளான சாயிமா வாஸத், உலக சுகாதார அமைப்பின் (WHO) தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு, அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால் சாயிமா மீது அழுத்தம் அதிகரித்தது.
சாயிமாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க உலக சுகாதார அமைப்பு ஜனவரியில் தேர்தல் நடத்தத் திட்டமிட்டுள்ளது.