
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்துள்ள டாக்ஸிக் திரைப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராக உள்ளது.
அமெரிக்காவில் தொடங்கியுள்ள முன்பதிவில் இப்படம் 1 லட்சம் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.
சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில், 592 காட்சிகளுக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.