
வெங்கட் இயக்கத்தில் ஜீவா, ரஜிஷா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தகப்பன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தங்கப்புள்ள’ வெளியாகியுள்ளது.
மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அப்பா - மகன் உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 40 நாள்களில் நிறைவடைந்துள்ளது.
இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.