Indian Politics
லண்டனில் நடிகர் அஜித்துடன் முதல்வர் விஜய் சந்திப்பு: எதிர்க்கட்சிகள் கண்டனம்

லண்டனில் நடிகர் அஜித்துடன் முதல்வர் விஜய் சந்திப்பு: எதிர்க்கட்சிகள் கண்டனம்

Vikatan1d
THE BRIEF
1

தொழில் முதலீடுகளை ஈர்க்கச் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், முதல்வர் விஜய் லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தைத் கொடியசைத்து தொடங்கிவைத்து அவருடன் நேரம் செலவிட்டார்.

2

டெங்குக் காய்ச்சல் மற்றும் விவசாயிகள் போராட்டம் போன்ற பிரச்னைகள் தமிழகத்தில் தலைவிரித்தாடும் நிலையில் முதல்வர் குதூகலமாகக் பொழுதைக் கழித்தது எதிர்க்கட்சிகளிடம் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

3

மறுபுறம், ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் சர்வதேசக் கார்ப்பந்தயங்களை நடத்துவதற்கு ஏதுவாக சென்னையில் ஒருங்கிணைந்த விளையாட்டு நகரம் அமைப்பதற்காகவே முதல்வர் லண்டன் சென்றதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.