
நிதிப் பற்றாக்குறை காரணமாக காசா முனையில் வசிக்கும் 5 லட்சம் மக்களுக்கான மாதாந்திர உணவு உதவியை ஐநா சபையின் உலக உணவுத் திட்டம் முழுமையாக நிறுத்தியுள்ளது.
இதன் காரணமாக இதுவரை உதவி பெற்று வந்தோரின் எண்ணிக்கை 16 லட்சத்திலிருந்து 11 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் வழங்கப்பட்ட சூடான உணவு பொட்டலங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதால், காசாவில் பசி மற்றும் பட்டினி நெருக்கடி மேலும் தீவிரமடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.