
ஜப்பானின் நகோயா நகரில் நடைபெற்று வரும் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளம் கலப்பு 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
இப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜன் இடம்பெற்றுள்ளார்.
அபிநயா ராஜராஜனின் சாதனையைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.