
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவில் குகைப்பாதையில், உடல் பருமன் காரணமாக ஆந்திராவைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் சிக்கித் தவித்தார்.
கடந்த 24-ம் தேதி நள்ளிரவு இதே குகைப்பாதையில் சிக்கிய ஆந்திராவைச் சேர்ந்த மணிக்குமார் (36) என்பவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
குகைக்குள் சிக்கிய பெண் பக்தரை அங்கிருந்தவர்கள் கையைப் பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்தனர், இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.