
திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில், செமி கிரையோஜெனிக் என்ஜினின் 200 டன் முழுதிறன் உந்துவிசை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த ஹாட் டெஸ்ட் சோதனையானது மொத்தம் 35 விநாடிகள் நடைபெற்றது, இதில் என்ஜின் பவர் ஹெட் 200 டன் உந்துவிசையில் 5 விநாடிகள் இயங்கியது.
எல்விஎம்3 ராக்கெட்டின் உந்துவிசை திறனை அதிகரிக்க உருவாக்கப்படும் இந்த எஸ்இ2000 என்ஜின், சந்திரயான் 3 போன்ற விண்கலங்களை ஏவும் திறனை மேம்படுத்தும்.