
ஆதிதிராவிடர் நலனுக்காக சமூக நீதி நல வாரியம் மற்றும் சமூக நீதி அறக்கட்டளை அமைக்கப்படும் என அமைச்சர் வன்னி அரசு அறிவித்துள்ளார்.
பள்ளி விடுதி மாணவர்களின் மாதாந்திர உணவுக் கட்டணம் 1,400 ரூபாயிலிருந்து 1,800 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 1,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
வீடற்ற ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு 5,000 கான்கிரீட் வீடுகளும், பழங்குடியினருக்கு 2,000 வீடுகளும் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.