
காவல்துறை மானியக்கோரிக்கையின் போது முதல்வர் விஜய் சர்க்காரியா கமிஷன் மற்றும் மிசா கைதுகள் குறித்துப் பேசியது சட்டப்பேரவையில் பெரும் அமளியை ஏற்படுத்தியது.
கலைஞர் மற்றும் முரசொலி மாறன் குறித்து முதல்வர் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் கே.என்.நேரு வலியுறுத்தினர்.
சர்க்காரியா கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்ததாக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வாதிட்ட நிலையில், சபாநாயகர் அவைக்குறிப்பிலிருந்து நீக்க முடியாது என உறுதியாகக் கூறிவிட்டார்.