
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டு இருமுறை அகவிலைப்படி திருத்தி அமைக்கப்பட்டு அறிவிக்கப்படும் நிலையில், 2026 ஜூலைக்கான திருத்திய அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை.
நாட்டின் தீபாவளி பண்டிகைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், அக்டோபர் 28 அன்று நடக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இம்முறை மத்திய அரசு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த வாய்ப்புள்ளதாகவும், இது ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.