
சீனப் பொருட்கள் இந்தியா வழியாக அமெரிக்காவிற்குள் வருவதாகக் கூறி, சென்னை, புனே மற்றும் குஜராத் உற்பத்தி மையங்கள் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் வர்த்தகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், இந்த நகரங்கள் அமெரிக்கப் பொருளாதாரத்திற்குச் சவாலாக உள்ள 'பயங்கர போட்டி நகரங்கள்' என வர்ணிக்கப்பட்டுள்ளன.
இந்திய நிறுவனங்கள் எந்தவிதமான நேரடி விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்பதை அமெரிக்க அறிக்கையே ஒப்புக்கொண்டாலும், இந்த வளர்ச்சி உற்றுநோக்கப்படுகிறது.