/polimer-news/media/media_files/2026/10/29/vlcsnap-2026-10-29-13h28m42s590-2026-10-29-13-29-02.png)
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் அரபுக் கட்சிகள் கிங் மேக்கராக உருவெடுத்ததைத் தொடர்ந்து, அந்தக் கட்சிகள் மீது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாக்குத் திருட்டு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.
தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி மொத்தமுள்ள 120 இடங்களில் நெதன்யாகு கட்சிக்கு 53 இடங்களும், அரபுக் கட்சிகளுக்கு 19 இடங்களும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரபு கட்சிகள் லஞ்சம், வன்முறை மற்றும் தடைசெய்யப்பட்ட மென்பொருளைப் பயன்படுத்தி தேர்தல் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.