
அமெரிக்காவுடன் இனி நேரடி பேச்சுவார்த்தை கிடையாது என்றும், மத்தியஸ்தர்கள் வாயிலாகவே பேசுவோம் என்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஸி அறிவித்துள்ளார்.
ஈரான் பார்லிமென்ட் துணை சபாநாயகர் ஹமித்ரெசா ஹாஜி பபேயி, அமெரிக்க தாக்குதலுக்கு உதவும் நாடுகள் ஈரானின் ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது என எச்சரித்துள்ளார்.
ஏமனின் மோகா துறைமுகம் மீது ஹவுதிப்படையினர் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், சவுதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் கட்டமைப்பு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.