
தனது பேட்டிங் பாணி குறித்து யாரும் அறிவுரை கூறத் தேவையில்லை என்றும், தனது விருப்பப்படியே விளையாடப் போவதாகவும் சஞ்சு சாம்சன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
31 வயதாகும் தான் ஏற்கனவே பல சாதனைகளைச் செய்துவிட்டதாகவும், சக வீரர்களுக்கு ஆதரவாக இருந்து தனது பாணியில் விளையாடுவதே தனது இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன், 2028 உலகக்கோப்பை குறித்து இப்போதே கவலைப்படத் தேவையில்லை என்று தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.