
உக்ரைனுக்கு பிரிட்டன் ஆயுதங்கள் வழங்குவதற்குப் பதிலடியாக அந்நாட்டின் ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, ரஷ்ய அதிபர் புதின் 'அது ஒரு ராணுவ ரகசியம்' எனப் பதிலளித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
கிர்கிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய புதின், உக்ரைனுக்கு உதவும் நாடுகள் மீது பதிலடி கொடுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.